Wednesday, November 13, 2013

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தேர்தல்: சீனா, ரஷ்யா உள்பட 14 நாடுகள் தேர்வு


14 நாடுகளின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து நேற்று நடந்த புதிய நாடுகள் தேர்வில் மீண்டும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தேர்வாகியுள்ளன. ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் 47 உறுப்பு நாடுகள் உறுப்பு நாடுகளாக அங்கம் வகித்து வருகின்றன.

 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இந்த கவுன்சிலுக்கான புதிய உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படும். உலகின் எந்த மூலையில் மனித உரிமை மீறல் நடந்தாலும் உடனடியாக அவற்றின் மீது எடுப்பதும், பாதிக்கப் பட்டவர்களுக்குத் தகுந்த நீதியைப் பெற்று தருவதுமே இந்த கவுன்சிலின் முக்கியப் பணியாகும். இந்தக் கவுன்சிலில் ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரேசில், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகித்து வரும் நிலையில், வரும் ஜனவரி முதல் தேதியோடு 14 நாடுகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. 

எனவே, புதிய நாடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசியத் தேர்தல் நேற்று நடைபெற்றது. 14 பதவிகளுக்கான தேர்தலில் மொத்தம் 16 நாடுகள் போட்டியிட்டன. அவற்றில் இரு நாடுகள் ஐ.நா.சபையின் கோட்பாடுகளுக்கு உகந்தவையாக இல்லாததால் தகுதியிழந்து புறக்கணிக்கப் பட்டன.

எனவே, மீதமிருந்த 14 நாடுகள் கவுன்சிலுக்கு தேர்வாகின. அவையாவன, சீனா, ரஷ்யா, கியூபா, சவூதி அரேபியா, அல்ஜீரியா, பிரிட்டைன், பிரான்ஸ், மாலத்தீவுகள், மசெடோனியா, மெக்சிகோ, மொரோக்கோ, நமீபியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் ஆகும்
.

Disqus Comments