Wednesday, November 6, 2013

பொதுநலவாய மாநாட்டிற்கு 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு : 5000 பேர் போக்குவரத்து கடமையில்.

பொது­ந­ல­வாய அரசு தலை­வர்­களின் மாநாட்­டினை முன்­னிட்டு தலை­ந­கரில் பல்­வேறு மாற்று போக்­கு­வ­ரத்து நடை­மு­றைகள் பொலி­ஸா­ரினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் விசேட பாது­காப்பு ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

இதன்­படி பொது­ந­ல­வாய அரசு தலை­வர்­களின் மாநாட்­டுக்­காக 15 ஆயிரம் பொலிஸார் பாது­காப்புகட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் மேல­தி­க­மாக 5000 பொலிஸார் போக்­கு­வ­ரத்து கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் றோகண தெரி­வித்தார். 

பாது­காப்­புக்­காக பணியில் ஈடு­ப­டுத்­தப்­படும் பொலிஸார் கடமை நேர சீரு­டைக்கு மேல­தி­க­மாக சிவில் உடை­யிலும் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர் என சுட்­டிக்­காட்­டிய பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அவ்­வப்­போது பொது­ந­ல­வாய அரச தலை­வர்­களின் போக்­கு­வ­ரத்தின் நிமித்தம் பதைகள் மூடப்­ப­டும்­போது அப்­பா­தைகள் ஊடாக பய­ணிப்­பது முற்­றாக தடை செய்­யப்­படும் என்றும் குறிப்­பிட்டார்.

பொது­ந­ல­வாய அரச தலை­வர்­களின் மாநாட்­டினை முன் னிட்டு தலை­ந­கரில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள விசேடபோக்­கு­வ­ரத்து நடை­மு­றைகள் தொடர்பில் விளக்­க­மளிக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு அரச தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்­ற­போது அதில் கலந்­து­கொண்டு உரை யாற்­று­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இந்த செய்தி யாளர் சந்­திப்பில் மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்­ட­பி­ரதி பொலிஸ் மா அதிபர் அனு­ர­சே­ன­நா­யக்க, போக்­கு­வ­ரத்து பிரி­வு­களுக்­குப்­பொ­றுப்­பான சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் அம­ர­சிறி சேனா­ரத்ன ஆகி­யோரும் கலந்­து­கொண்டு போக்­கு­வ­ரத்து நடை­மு­றைகள் குறித்து விளக்­க­ம­ளித்­தனர்.

இதன்­படி பொது­ந­ல­வாய அரச தலை­வர்­களின் மாநாட்டு க்கான போக்­கு­வ­ரத்து ஒழுங்­குகள் எதிர்­வரும் 9ஆம் திகதி முதல் 18ஆம் திக­தி­வரை அமு­லி­லிருக்­கு­மென சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க குறிப்­பிட்டார்.

எவ்­வா­றா­யினும் இந்த புதிய போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­களால் பொது­மக்­களின் அன்­றாட நட­வ­டிக்­கை­க­ளுக்கு எந்­த­வித பாதிப்­புக்­களும் ஏற்­ப­டாது என போக்­கு­வ­ரத்து பிரி­வு­களுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அமர சிறி­சே­னா­ரத்ன சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து புதிய பாதை ஒழுங்­குகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அஜித் றோகண விளக்­க­ம­ளித்தார்.

இதன்­படி பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து வரு­கை­தரும் போதும், மாநாட்டில் நிறைவில் திரும்­பும்­போதும் கட்­டு­நா­யக்க கொழும்பு அதி­க­வேக பாதை, புதிய களனி பாலம், ஒரு­கொ­ட­வத்த சந்தி, தெமட்­ட­கொட, பொரளை ஊடான பேஸ்லைன் வீதி, பெள­த்தலோக மாவத்தை, தும்­முல்ல சந்தி, பம்­பலப்­பிட்டி சந்தி, காலி வீதி, கொள்­ளுப்­பிட்­டி வீதி, காலி­மு­கத்­திடல் சுற்­று­வட்டம், பழைய பாரா­ளு­மன்ற சுற்­று­வட்­டாரம், லோட்டஸ் வீதி, செரமிக் சந்தி, ரீகல் சந்தி, கொம்­ப­னித்­தெரு பொலிஸ் நிலையம் முன்­னா­லுள்ள சுற்­று­வட்டம் வரை­யி­லான பாதைகள் அவ்­வவ்­போது தேவைக்­கேற்ப 20 முதல் 30 நிமி­டங்கள் மூடப்­ப­ட­வுள்­ளன.

அதன்­போது பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள்போக்­கு­வ­ரத்­துக்கு மட்டும் அந்த வீதிகள் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

இதே­வேளை, பொது­ந­ல­வாய அரச தலை­வர்­களின் மாநாட்டின் பிர­தான நிகழ்வு ஆரம்­ப­மாகும். 15ஆம் திக­தியும் விசேட போக்­கு­வ­ரத்து ஒழுங்குகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இதன்­படி ஆரம்ப வைபவம் இடம்­பெறும் தாமரை தடா­கத்தை நோக்­கியும் அத­னை­ய­டுத்து நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்ள பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தை நோக்­கியும் இந்த போக்­கு­வ­ரத்து ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

குறித்த தினத்தில் கொம்­ப­னித்­தெரு சுற்­று­வட்டம் முதல் ரீகல் சந்தி, செரமிக் சந்தி, லோட்டஸ் வீதி, பழைய பாரா­ளு­மன்ற சுற்­று­வட்டம், காலி வீதி, கொள்­ளுப்­பிட்டி சந்தி, லிபேட்டி சுற்­று­வட்டம், தர்­ம­பால மாவத்தை, வாசி­க­சாலை சுற்­று­வட்டம் ஊடாக தாமரை தடா­கத்தை நோக்கி அரச தலை­வர்கள் பய­ணிப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அத்­துடன், தாமரை தடா­கத்­தி­லி­ருந்து நந்தா மோட்டார் சந்தி, சுதந்­திர சதுக்கம், உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சு சந்தி, பெளத்­தா­லோகா மாவத்­தை­யூ­டாக, பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­திற்கு பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் தமது இரண்­டா­வது அமர்­வுக்கு செல்­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன. இதன்­போது பொது­மக்கள் பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டிய மாற்று வீதி ஒழுங்­கு­க­ளையும் பொலிஸ் திணைக்­க­ளத்தின் போக்­கு­வ­ரத்து பிரிவு தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

இதன்­படி கொம்­பனி வீதியின் பொலிஸ் நிலையம் அரு­கி­லி­ருந்து ரீகல் செரமிக் சந்­தி­வ­ரை­யிலும் கொள்­ளுப்­பிட்டி சந்தி முதல் பாக் வீதி சந்­தி­வ­ரை­யிலும் கன்­னங்­கர வீதிஇ எவ்.ஆர். சேன­நா­யக்க சந்தி முதல் நெலும்­பொக்­குன சுற்­று­வட்டம் வரை­யிலும் வீதி போக்­கு­வ­ரத்­துக்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும். இதற்கு மேல­தி­க­மாக தும்­முல்ல சந்­தி­யூ­டான போக்­கு­வ­ரத்தும் வான்ஸ் பிளேஸ் யூடான போக்­கு­வ­ரத்தும் விஜ­ய­ராம வீதியின் றொஸ்மிற் பிளேஸ் சந்­தி­வ­ரை­யி­லான போக்­கு­வ­ரத்தும் இலங்கை மன்றக் கல்­லூரி வீதியும் புளஸ் வீதிஇ மயான சுற்­று­வட்டம் முதல் ஜாவத்தை வரை­யி­லான வீதி­யிலும் 20 முதல் 30 நிமி­டங்கள் வரையில் அவ்­வப்­போது போக்­கு­வ­ரத்து தடை செய்­யப்­ப­டு­மென பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்தார்.

இத­னை­விட 16ஆம்இ 17ஆம் திக­தி­க­ளிலும் விசேட போக்­கு­வ­ரத்து ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. விசே­ட­மாக காலை 8.30 மணி முதல் இந்த விசேட வீதி ஒழுங்குகள் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் அவை சுமார் 11 மணி வரையில் நீடிக்கும் என பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார்.

இவற்­றுக்கு மாற்று வீதி­க­ளாக ஹைலெவல் வீதி­யூ­டாக கொழும்பு நோக்கி பய­ணிக்கும் கன­ரக வாக­னங்கள் கிரு­லப்­பனை சந்தியூடாக பேஸ்லைன் வீதிஇ பொரளைஇ மருதானை யூடாக கொழும்பு நோக்கி பயணிக்க முடியு ெமனவும் கொழும்பிலிருந்து ஹைலெவல் வீதியை ஊடறுத்து பயணிக்கும் பஸ் மற்றும் கனரக வாகனங்களும் இதே வீதி ஒழுங்கினை பின்பற்ற முடியுமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதானமாக ஹைலெவல் வீதிஇ காலி வீதி ஆகியவற்றின் போக்குவரத்து நடை முறைகளிலேயே விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. அவ் ஒழுங்குகள் குறித்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களுக்கு அறிவிக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Disqus Comments