Wednesday, November 6, 2013

மகாத்மா காந்தியின் நெசவு இராட்டினம் 1.8 இலட்சம் டொலர்களுக்கு விற்பனை (படங்கள்)

மகாத்மா காந்தியினால் பயன்படுத்தப்பட்ட கை நெசவு இராட்டினம் பிரித்தானியாவில் 1.8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது..

1930ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்துக்காக பூனா சிறையில் அடைக்கப்பட்ட போது, தனது உடைகளை நெய்வதற்காக காந்தி இந்தக் கைராட்டினத்தை பயன்படுத்தியுள்ளார்.

காந்தியின் உயில் மற்றும் அரிதான சில கடிதங்கள் உட்பட 60 அரும் பொருட்கள் ஏலத்திற்கு வந்துள்ளன.

மேலும் இந்த வருட ஆரம்ப பகுதியில் மகாத்மா காந்தியின் பாதணி . சால்வை மற்றும் சில பொருட்கள் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்சுக்கும் அவரது மூக்குக் கண்ணாடி கடந்த வருடம் 34 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்சுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 
Disqus Comments