எகிப்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று இராணுவ அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த கோடைக் காலத்திற்கு முன்பாகவே எகிப்தில் தேர்தல் நடைபெறும் என்று
இராணுவ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் நபீல் அல் பஹ்மி கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேர்தலுக்குப் பிறகு இடைக்கால அரசு
இராஜினாமா செய்யும். இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் கட்சியான ப்ரீடம் அண்ட்
ஜஸ்டிஸ் பார்ட்டி (எப்.ஜே.பி.) தேர்தலில் போட்டியிடலாம்.
அக்கட்சி தற்போது சட்டத்திற்கு உட்பட்டே எகிப்தில் இயங்கி வருகிறது என்று
தெரிவித்துள்ளார். எகிப்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
ஜனாதிபதியான முஹம்மது முர்ஸி இராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியை விட்டு
அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இஃவானுல் முஸ்லிமீனுக்கு தடை விதிக்கப்பட்டள்ளமை
குறிப்பிடத்தக்கது.
