Sunday, November 10, 2013

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் : விரிவான விசாரணை நடத்த வேண்டும் - பிரித்தானியப் பிரதமா்

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று காமன்வெல்த் மாநாட்டில் வலியுறுத்தப் போவதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார். இலங்கையில் வரும் 15ம் தேதி காமன்வெல்த் மாநாடு நடக்கிறது. இந்நாட்டில் இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல நாடுகள் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த கூட்டமைப்பில், 37 நாடுகள் மட்டுமே கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனடா அறிவித்து விட்டது. பிரிட்டனும் புறக்கணிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.

இது பற்றி லண்டனில் வெளியாகும் தமிழ் கார்டியன் என்ற தமிழ் பத்திரிக்கைக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

இலங்கையில் நடந்த இறுதி போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றியும், தற்போது நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் விரிவான, வெளிப்படையான விசாரணையை சுதந்திர அமைப்பின் மூலம் நடத்தும்படி இலங்கை அரசை வலியுறுத்துவேன். மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறையை கைவிடும்படியும், பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

போர் நடந்த பகுதியில் தேர்தல் நடைமுறையை மேம்படுத்துவது, மறுகட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, போரின்போது குடி பெயர்ந்தவர்களை மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்துவது, அதற்காக அப்பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது ஆகியவை மிகவும் முக்கியமான பணிகள். உலகளவில் ஈராக் நாட்டிற்கு அடுத்து இலங்கையில்தான் போரின் போது 5,676 பேரை காணவில்லை என்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கேமரூன் கூறியுள்ளார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?world/gsaafvfafd534666fae5b05c13085wsyxz0f64c4d2bdcdf1ad85f7b2eri2l#sthash.m94bQU3m.dpuf
Disqus Comments