இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான
ருவென்டி ருவென்டி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் நியூசிலாந்து சார்பில் ரொஞ்சி 34 ஓட்டங்களையும் டேவிச் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இல்கை அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இலங்கை அணி சார்பில் ஜனித் பிரேரா 57 ஓட்டங்களையும் தில்ஷான் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட ருவென்டி ருவென்டி தொடரை இலங்கை ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.