யாழ் பல்கலைக்கழத்தில் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட குழு மோதலில் 03
பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனாவைத்திய சாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக விடுதியினுள் மதுபோதையில் வந்த 02 ஆம் வருடத்தில் கல்வி
கற்றும் மாணவர்கள் 01 ஆம் வருடமாணவர்களின் விடுதிக்குள் புகுந்து பகிடிவதை
மேற்கொள்ள முயற்பட்ட போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனாவைத்திய
சாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டாரம்
தெரிவித்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தில் பேரில் 06 மாணவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
