பல்கலைக்கழக அனுமதிக் கான வெட்டுப்புள்ளிகள் இன்று 8 ஆம் திகதி வெளி
யிடப்படவுள்ளதாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் கெஷனிக்கா
ஹிநிபுரேகம தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு க. பொ. த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 24,000 பேர்
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கும் வேலைகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக கூறிய அவர்
இம்முறை 50,000 க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்கள் அனுப்பி வைத்துள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியும்
மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. முதற்கட்ட பயிற்சிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி
ஆரம்பிக்கப்படுகிறது.
இதில் 8000 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ள தாகவும் உயர் கல்வி அமைச்சு
தெரிவித்தது.
