Sunday, December 1, 2013

விபத்தின்பின் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான ஒரு வைத்தியரினால் ஆரம்பிக்கப்பட்ட எச்.ஐ.வி. நோயாளிகளைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் முதல் அமைப்பு

எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானதால் தீண்டப்படாதவர்கள் என சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பே லங்கா பிளஸ் ஆகும். இந்த அமைப்பை ஸ்தாபித்தவர் இலங்கையின் பிரபல சிறுவர் நல விசேட வைத்தியரான அமரர் டாக்டர் திருமதி காமலிக்கா அபேயரத்ன. சற்றும் எதிர்பாராத விதமாக தானும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் இந்த அமைப்பை ஸ்தாபித்தார் டாக்டர் கமாலிக்கா.

ஒருநாள்  இவரின் வாகனம் காலி நகரில் விபத்தில் சிக்கியது. டாக்டர் திருமதி காமலிக்கா அபேயரத்ன பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இருந்த அவ்வேளையில் இவருக்கு இரத்தம் தேவைப்பட்டு இரத்தம் வழங்கப்பட்டது. இவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட இரத்தம் பரிசோதிக்கப்பட்டது.

 இரத்தப் பரிசோதனையின் மூலம் டாக்டரின் இரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவரின் கணவரும் பிரபல வைத்தியராவார். இரத்த மாற்றத்தின்போதே இவருக்கு எச்.ஐ.வி. தொற்று நுழைந்துள்ளது. டாக்டரின் உடலில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிந்ததும் இவரின் உறவினர்களும் வைத்தியசாலை ஊழியர்கள் முதல் உயர் வைத்தியர்கள்வரை இவரை ஒதுக்கி வைத்தனர். இவர் சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதன் விளைவாக 1997ல் எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளை பாதுகாப்பதற்காக டாக்டர் திருமதி காமிலிக்கா அபேயரத்னவால் ஆரம்பிக்கப்பட்டதே லங்கா ப்ளஸ் என்ற அமைப்பாகும்.

டாக்டர் திருமதி காமலிக்கா அபேயரத்ன மரணமானதன் பின்னர் இவ்வமைப்பு பலரின் தலைமையில் இயங்கி வந்துள்ளது. தற்போது இவ்வமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைப்பின் ஊடக பேச்சாளருமான சரத் பீரிஸ் இவ்வமைப்பின் சேவைகள் பற்றி  மெட்ரோ நியூஸிற்கு விரிவாக தெரிவித்தார் :

இன்று இவ்வமைப்பில் எச்.ஐ.வி. தொற்று நோயாளிகள் நாடு முழுவதுமாக 280 பேர் உள்ளனர். இளம் வயது சிறுவர்கள் இருபது பேர்வரை உள்ளனர். அரச மருத்துவமனையின் மூலமாக இந்நோயாளிகளுக்கான மருந்து வகைகள் இலவசமாக கிடைக்கின்றன.

நம்பிக்கையற்ற உறவின் மூலமே எச்.ஐ.வி. பரவுகின்றது. எச்.ஐ.வி. தொற்று நோயாளர்கள் என இனம் கண்டப் பின்னர் அவர்களை குடும்பத்தினர வீட்டை விட்டு வெளியேற்றுகையில் அக்குடும்பத்தாரிடம் நோயாளியை ஏற்றுக் கொள்ளும் வகையில் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவோம். இது மிகவும் கஷ்டமான செயலாகும். ஒவ்வொருவரின் மனதையும் பண்படுத்தல் மிகப் பெரிய சவலாகும். நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குதல். அவர்களை தைரியப்படுத்தி சுய தொழிலில் ஈடுபட வைத்தல். எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளை புதிரான உலகுக்குள் நுழைய வைப்பதற்காக அவர்களையே புரிந்துகொள்ள வைத்தல் என பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்   சரத் பீரிஸ்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகப்படியான எச்.ஐ.வி. தொற்று நோயாளர்கள் உள்ளனர். மலையகப் பகுதிகளிலும் சுமார் ஆறு பேர் வரையில் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இலங்கையின் பல பிரதேசங்களையும் சேர்ந்த ஒன்பது ஆண், பெண் நோயாளிகள் எமது அமைப்பின் கட்டிடத்தில் தங்கி வாழ்கின்றனர். இவர்கள் தங்களின் குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டவர்கள். இவ்வாறானவர்களுக்கு எமது அமைப்பு புனர்வாழ்வு வழங்குகின்றது எனவும் தெரிவித்தார்.

எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களையும் சப்பாத்து பாடசாலை சீருடை, பேக் வகைகளையும் "@ஹாப்ரோ சேவ் சில்ரன்' அமைப்பின் உதவியோடு வழங்கி வருகின்றோம். அத்தோடு இவ்வமைப்பின் ஊடாக இம்மாணவர்களுக்கு மாதா, மாதம் சிறு நிதி உதவியையும் வழங்குகின்றோம். இந்நிதி உதவி சுகாதாரம், கல்வி, போசாக்கு மேம்பாட்டுக்காகவே வழங்கப்படுகிறது. அத்தோடு சிப்பீஸ் பிரண்ட் அமைப்பின் மூலமாக உலர் உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன. எங்களின் அமைப்பிடம் பண வசதி இல்லை. பல்வேறு தொண்டு நிறுவனங்களின் ஊடாகவே இவ்வாறான சேவையை முன்னெடுத்துச் செல்கின்றோம். இது மிகவும் கஷ்டமான ஒரு பணியாகும்.

இதற்கு அப்பால் எமது அங்கத்தவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கும் நிலையில்  பொருத்தமான சிகிச்சை முறைகளையும் தடுப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டுமென்று அவசியம் வலியுறுத்துவது எங்கள் அமைப்பின் கட்டாய கடமையாகும்.

நோய்வாய்ப்படும்போது நல்ல கவனிப்பினை பெறுங்கள். உங்களின் உடலைச் சுத்தமாக வைத்திருங்கள். பற்களை நன்கு பாதுகாப்பாக வைத்திருங்கள். முறையாக மருந்து வகைகளையும், உணவையும் உண்ணுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நன்கு ஓய்வு பெறுங்கள் என தொற்று நோயாளர்களை அறிவுறுத்துவோம்.

எச்.ஐ.வி. தொற்று நோயாளி என அறிந்ததும் நோயாளியின் குடும்பங்களில் @நர்மையற்ற தன்மை வெளிப்பட ஆரம்பிக்கும்போது எவ்வளவுதான் நாகரீகமான முறையில் செயல்பாடுகள் அமைந்திருந்தாலும் அக்குடும்பம் சுக்கு நூறாக சிதைந்து விடும் என்பது உண்மை. இதை நிவர்த்தி செய்ய பெரும் முயற்சியை "லங்கா ப்ளஸ்' அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. முழுக் குடும்பமும் உண்மையோடு ஒத்துவாழ கடுமையாக விழிப்புணர்வை சமூகம் மத்தியில் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.


அவர் தொடர்ந்து விளக்குகையில்;

தற்போது இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று நோயாளர்களின் மரணம் மிகவும் குறைவை எட்டிவிட்டது. இந்நோயாளர்களுக்கான அனைத்து மனித உரிமைகளையும் இச்சமூகம் வழங்குதல் அவசியம். இவர்கள் தீண்டப் படாதவர்கள் அல்லர். இவர்களுக்கும் சமூகத்துக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்படக்கூடாது. உண்மையிலேயே எச்.ஐ.வி. தொற்று என்பது சுயமரியாதைக் குறைவை காட்டும் ஒரு சின்னம் என எண்ணுவது தவறானதாகும். ஆளுக்கு ஆள் பரப்பிவிடும் தவறான வார்த்தைக@ள சமூகத்தில் தவறான பிரசாரத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அனைவரும் செழிப்பாகவும் வளமாகவும் இருந்தால் அப்போதுதான் சமூகம் தவறான தகவல்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும்.

இன்று எச்.ஐ.வி. நோயாளர்களுக்கான மருந்து வகைகளும், பரிசோதனைகளும் நிறைந்து உள்ளன. உதாரணமாக கர்ப்பிணி தாயொருவர் எச்.ஐ.வி. தொற்றாளர் என அவர் தெரிந்து கொண்டால் உடனடியாக அவர் வைத்தியரை நாடி உரிய சிகிச்சைகளை மேற்கொண்டால் கருப்பைக்குள் வாழும் சிசு எச்.ஐ.வி. தொற்றின் தாக்கத்திலிருந்து முற்றாகப் பாதுகாக்கப்படும். குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று நுழைய மருந்தும் விஞ்ஞான சிகிச்சைகள் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம்.

பாரிய சேவையை எங்கள் அமைப்பின் தலைவி காலஞ்சென்ற டாக்டர் காமலிக்கா அபேயரத்ன அவர் அமரராகும் முன் மேற்கொண்டார். இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று நோயாளர்களுக்கான அமைப்பே இல்லாதிருந்த வேளையில் இச் சமூகத்தின் முன் எழுந்து துணிந்து செயல்பட்டவர் இவர். இவரின் துணிச்சலான செயலை இன்றும் நாம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம் என துணிவுடன் தெரிவிக்கிறார் சரத் பீரிஸ் அவர்கள்.

எமது அமைப்பிற்கான செõந்தக் கட்டிடம் இல்லை. வாடகைக்கே கட்டிடத்தை கொண்டுள்@ளாம். எமது வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல போதிய நிதி இல்லை. தேவையான நிதி இல்லாது திண்டாடுகின்றோம். அரசாங்கம் எமக்காக மருந்து வகைகளை மட்டுமே வழங்கி வருகின்றது. இலங்கை எயிட்ஸ் அமைப்பு எமது அலுவலகத்திற்கான மின்சார கொடுப்பனவுகளை மாதா மாதம் வழங்கி வருகின்றது. மேலும் இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்ட அமைப்பும் மக்கள் தேவ சபையின் போதகர் விஜித்த செனவிரத்ன போன்றோர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

எமது அமைப்பு இலங்கையின் சட்டபூர்வமான தொண்டு அமைப்பாகும். பாதுகாப்பு அமைச்சில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. "லங்கா ப்ளஸ்' சேவையை எச்.ஐ.வி. தொற்றாளர்களுக்கு தொடர்ந்து வழங்க காத்திருக்கின்றது. அதற்கான வளம் இல்லாமை பெரிய தடையாகும். தனவந்தர்கள் "லங்கா ப்ளஸி'ற்கு உங்களின் தாயின், தகப்பனின் பெயரில் கொழும்பு மாநகர எல்லைக்குள் மூன்று பேர்ச்சரஸ் காணி ஒன்றை வழங்க முன்வந்தால் அது பெரியதோர் புண்ணியமாக இருக்கும். இங்கு தங்கி  இருப்பவர்களுக்கான உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யவும் அனுசரணையாளர்களை தேடுகின்றோம். உங்களின் குழந்தைகளின் பிறந்த நாளை எங்களுடன் கொண்டாடுங்கள். எங்களின் தேவைகளை ஒதுக்காதீர்கள். நாங்களும் இச் சமூகத்தின் உறுப்பினர் என்பதை உணருங்கள்.

நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றவர்கள் அல்ல நாங்கள் பாவப்பட்ட கூட்டமுமல்ல. எங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எங்கள் மீதும் மதிப்பை செலுத்துங்கள் என்கிறார் "லங்கா ப்ளஸ்' அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான சரத் பீரிஸ். இவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 071 6195573 என்ற கைப்பேசி மூலமாக மேற்கொள்ளலாம். இவ்வமைப்பின் இணையத்தள முகவரி ஃச்ணடுச்ணீடூதண்.ணிணூஞ் ஆகும். இவர்களின் நிறைந்த வாழ்விற்கான வழி தரமான வாழ்க்கை வாழ நீங்களும்ஒரு பொது வழிகாட்டியாக நிமிருங்கள் எனவும்  சரத் பீரிஸ் கூறினார்.
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானதால் தீண்டப்படாதவர்கள் என சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பே லங்கா பிளஸ் ஆகும். இந்த அமைப்பை ஸ்தாபித்தவர் இலங்கையின் பிரபல சிறுவர் நல விசேட வைத்தியரான அமரர் டாக்டர் திருமதி காமலிக்கா அபேயரத்ன. சற்றும் எதிர்பாராத விதமாக தானும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் இந்த அமைப்பை ஸ்தாபித்தார் டாக்டர் கமாலிக்கா.

ஒருநாள்  இவரின் வாகனம் காலி நகரில் விபத்தில் சிக்கியது. டாக்டர் திருமதி காமலிக்கா அபேயரத்ன பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இருந்த அவ்வேளையில் இவருக்கு இரத்தம் தேவைப்பட்டு இரத்தம் வழங்கப்பட்டது. இவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட இரத்தம் பரிசோதிக்கப்பட்டது.

- See more at: http://metronews.lk/feature.php?feature=42&display=0#sthash.jBmfKd02.dpuf
Disqus Comments