அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெற்ற 7வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் 16 சிக்ஸர்களை விலாசியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை விலாசிய வீரர் என்ற வாட்சனின் (15 சிக்ஸா்கள்) என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
அத்துடன் ஒருநாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடித்த 3வது இந்திய விரர் என்ற பெருமையும் சர்மா வசமானது. சச்சின் (200) மற்றும் சேவாக் (219) ஆகியோர் முன்னதாக இரட்டை சதங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டி இன்று பெங்களூரில் நடக்கிறது. 7 போட்டிகள் கொண்ட தொடரில் 2 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் 7-வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த ஜோடி 17 ஓவர்களில் 107 ஓட்டங்களைக் குவித்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றபிறகு சிறிது நேரத்தில் போட்டி மீண்டும் தொடங்கியது.
சிறிது நேரத்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 57 பந்துகளில் 60 ஓட்டங்களை சேர்த்தார். அதன்பின்னர் வந்த கோலி ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ரெய்னா (28), யுவராஜ் சிங் (12) ஆகியோரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா, பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக பறக்கவிட்டார். டோனியும் மின்னல் வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
156 பந்துகளில் 12 பவுண்டரி, 16 சிக்சர்களுடன் இரட்டைச் சதம் விளாசி இரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ரோகித் சர்மா. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை தன் வசப்படுத்திக் கொண்டார்.
அவர் 209 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மெக்கே பந்தில் ஆட்டமிழந்தார். டோனி, 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 383 ஓட்டங்களைக் குவித்தது. இதன்படி 384 என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸி. துடுப்பெடுத்தாடி வருகின்றது.