Sunday, November 3, 2013

அடையாளத்துக்காக முஸ்லிம் பெண்கள் பர்தாவை விலக்க வேண்டும் அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்

தங்களது அடையாளத்தை நிரூபிக்க முஸ்லிம் பெண்கள் அணிந்திருக்கும் பர்தாவை விலக்கி காண்பிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மாகாணம் ஒன்றில் பொலிஸ் அதிகாரிகளிடம் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முஸ்லிம் பெண்கள், அணிந்திருக்கும் பர்தாவை விலக்கி முகத்தை காண்பிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
முஸ்லிம் மற்றும் சீக்கிய மதத்தினருடன் கலந்தாலோசித்த பிறகே இந்தப் புதிய சட்டம் மேற்கு அவுஸ்திரேலிய மாகாண சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு அவுஸ்திரேலியாவின் தற்காலிக காவல்துறை அமைச்சர் ஜான் டே கூறுகையில், முஸ்லிம் மற்றும் சீக்கிய மதத்தவர்களின் ஆலோசனைக்குப் பிறகு முக்காடு என்ற வார்த்தைக்குப் பதிலாக முகம் மூடும் துணி என்று திருத்தம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் திருத்தம் சம்பந்தப்பட்ட மதங்களைச் சேர்ந்தவர்களின் கவலைகளைப் போக்கியுள்ளது என்றும், திருப்திகரமான சமரசம் எட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
THNKS: SOURCE HERE
Disqus Comments