புத்த பகவான், யேசு கிறிஸ்து, முகமது நபி போன்றவர்களினால் முழு உலகத்தை
திருத்த முடியாமல் போனது, அதுபோல் சகலருக்கும் முழுவதையும் திருத்த
முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரர்
தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கசினோ பற்றி சந்தித்து நாம் குழப்பமடைய தேவையில்லை. முழு உலகத்தையும் எம்மால் திருத்த முடியாது.
முழு உலகத்தையும் பாவத்தில் இருந்து மீட்க, புத்தர், யேசு, முகமது
போன்றவர்களால் முடியாது போனது. இதனை எந்த வகையிலும் செய்ய முடியாது.
அப்படியானால் நாம் ஏன் இப்படியானவற்றை நினைத்து கவலைப்பட வேண்டும் என்றார்.
பௌத்த மத துறவியான உடுவே தம்மாலோக்க தேரர் சூதாட்டத்திற்கு ஆதரவான கருத்து
வெளியிட்டுள்ளமை குறித்து பல்வேறு தரப்பினர் தமது எதிர்ப்புகளை வெளியிட்டு
வருகின்றனர்.
தம்மாலேக்க தேரர் எவருடையே ஒப்பந்ததையோ நிறைவேற்றும் நோக்கில் இவ்வாறு பேசி
வருவதாக பௌத்த அமைப்புகளின் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தம்மாலோக்க தேரர், சூதாட்டத்தை ஆதரிப்பதற்கு பதிலாக கொழும்பு மாநகர சபையில்
மலசல கூடம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து அதனை நிர்வகிக்கலாம் என தம்பர அமில
தேரர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
