Monday, November 11, 2013

தயட கிருள - 2014 ஐ முன்னிட்டு கல்பிட்டியில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு

தேசத்திற்கு மகுடம் - 2014 வேலைத்திட்டத்திற்கமைய கல்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தெரிவித்தார்.

இதற்கமைய குடிநீர் வேலைத்திட்டம், குளங்கள் புனரமைப்பு, மின்சாரம் திட்டம், தாய்சேய் சிகிச்சை நிலையம் புனரமைப்பு, நவீன வசதிகளுடனான தாய்சேய் சிகிச்சை நிலையம் அமைத்தல் என்பனவற்றுடன் கல்பிட்டியில் புதிய பஸ் நிலையம் மற்றும் நவீன வசதிகளுடனான சந்தை தொகுதி என்பன அமைக்;கப்படவுள்ளன.

இவ் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பிரதேசங்கள் தொடர்பில் இன்று கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

பிரதியமைச்சர் விக்டர் அண்டனி பெரேரா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், சிந்தக மாயதுக்க, கல்பிட்டி பிரதேச செயலாளர், கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம்.எச்.மின்ஹாஜ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றி பிரதியமைச்சர் விக்டர் அண்டனி பெரேரா 50 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடனான கல்பிட்டி பஸ் நிலையம், 20 மில்லியன் ரூபா செலவில் புதிய சந்தை கட்டிடம் என்பன அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
Disqus Comments