Monday, November 11, 2013

இலங்கை – நியூஸிலாந்து முதலாவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டது

இலங்கை, நியூஸிலாந்து  அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்களைப் பெற்றது.

திலகரட்ன தில்ஷான் 114 பந்துகளில 81 ஒட்டங்களையும் குமார் சங்கக்கார 81 பந்துகளில் 79 ஓட்டங்களையும் பெற்றனர். ஆணித்தலைவர் ஏஞ்சலோ மத்தியூஸ் 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களைப் பெற்றார்.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் கய்ல் மில்ஸ் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 4.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது.

இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  மழை தொடர்ந்தும் பெய்துகொண்டிருந்தால் இரவு 9.00 மணியளவில், இப்போட்டி கைவிடப்படுவதாக  அறிவிக்கப்பட்டது.

இத்தொடரின் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. 3 ஆவது போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=2901#sthash.Ap8fbZuO.dpuf
Disqus Comments