Friday, November 29, 2013

போதையில் வீதியில் கிடந்த நபரை விழுங்கிய மலைப்பாம்பு

போதை தலைக்கேறி வீதியில் விழுந்து கிடந்த நபரை மலைப்பாம்பொன்று விழுங்கிய சம்பவமொன்று அண்மையில் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவியுள்ளது.

 இந்நிலையில் தென் ஆபிரிகாவின் டேர்பன் நகரில் கடந்த ஜுன் மாதம் பெண்ணொருவரை மலைப்பாம்பு விழுங்கிய படத்தினை வைத்து வெளியிடப்பட்ட போலியான தகவல் இதுவென இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

 இதற்கிடையில் இச்செய்தி சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மீள் டுவிட் செய்யப்பட்டு வெகுவாகப்பரவியுள்ளது.

இப்படத்தினை கூகுள் இமேஜ் தேடலின் போது குறித்த புகைப்படத்தினை வைத்து வெளியான போலியான செய்தி இதுவென தெரியவந்துள்ளது.

எது எவ்வாறாயினும் இப்படத்தினை வைத்து இந்தியா, இந்தோனேஷியா என பல நாடுகளுடன் தொடர்புபடுத்தி பல போலியான செய்திகள் தற்போது இணையத்தில் உலா வர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=3163#sthash.ccvljqWU.dpuf
Disqus Comments