Wednesday, November 6, 2013

கால்கொடு முடிந்த பின் கைது செய்யப்படும் வெளிநாட்டவா்கள் (படங்கள்)

சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டுவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு 3.11.2013 அன்று முடிவடைந்தது. இதனை அடுத்து நேற்று காலைமுதல் சிறப்பு காவலர்களை வைத்து சோதனைசெய்து பிடிபடுபவர்களை சிறிதுகாலம் சிறையில் அடைக்கப்பட்டு பின்பு சொந்த நாட்டிற்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுவருகின்றது..
இந்த நாட்டைப்பொருத்தவரை சட்டதத்திற்கு புறம்பானவர்கள் என்பது:
  1. இகாமா (தங்கும் உரிமை) காலாவதியானவர்கள்
  2. தான் செய்யும் வேலைக்கும் இகாமாவில் அச்சிடப்பட்டுள்ள தொழில் பிரிவிற்கும் சம்மந்தமில்லாமல் இருப்பவர்கள்
  3. எந்த நிறுவனம்/நபர் நமக்கு விசா கொடுத்தார்களோ அவர்களை அடுத்து வேறொரு நிறுவனத்தில் பணிபுரிவது அல்லது நிறுவனம் வைத்திருப்பவர்கள்
  4. ஹஜ்,உம்ரா போன்றவற்றிற்காக வந்து நாடு திரும்பாமல் இருப்பவர்கள்
இத்தகையவர்கள் தங்களை சட்டத்திற்கு உட்பட்டவர்களாக மாற்றிக்கொள்ள ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்து நேற்றுடன் முடிவடைந்தது..
இதனால் இன்று காலையிலிருந்து சாலைகள் அதிக நெரிசல் இன்றி இருந்தது..சிலர் வீட்டிலியே பணிபுரியவும் செய்தனர்..
இன்றையதினம் காவலர்களிடம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, பிடிபட்டவர்களாக Arab news போன்ற ஊடகங்களில் வந்த புகைப்படங்கள் இதோ :






Disqus Comments