Monday, November 11, 2013

தற்கொலை செய்ய ஆற்றில் குதித்து பின் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி!

ஆற்றில் குதித்த காதல் ஜோடியை பொதுமக்கள் காப்பாற்றி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் தஞ்சை அருகே நடைபெற்றது.

தஞ்சை திருவோணம் அருகே உள்ள கீழகொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த சுந்தர் (27) என்பவரும், தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த  நதியா (25) என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்து  சனிக்கிழமை மாலை திருவோணத்தை அடுத்த ஊரணிபுரம் பெரிய ஆறு மதகுபகுதிக்கு சென்ற சுந்தரும், நதியாவும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் சிலர் இவர்கள் ஆற்றில் குதித்ததைப் பார்த்து, அவர்களை மீட்டு திருவோணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் இருவரின் பெற்றோரும் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு, பெற்றோரின்  சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
Disqus Comments