Thursday, December 19, 2013

மேல், தென் மாகாண சபைகள் 28இல் கலைக்கப்படும். மார்ச்சில் தோ்தல்

மேல் மற்றும் தென் மாகாணசபைகள் எதிர்வரும் 28ஆம் திகதி கலைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாகாணசபைகள் இந்த மாத இறுதியில் கலைக்கப்படும். எனவே,  தேர்தல்களை நடத்துவதற்கு தயாராக வேண்டும் என நேற்றையதினம் நடைபெற்ற  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதேவேளை, விரைவில் தேர்தல்களை நடத்துவதற்காக அடுத்த இரண்டு  அல்லது மூன்று வாரங்களில் இந்த மாகாணசபைகள் கலைக்கப்படும்; என நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்திருந்தார்.
Disqus Comments