இலங்கை மொறட்டுவை பல்பலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகளுக்கு நிகாப் அணிவதற்கு தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடையை விதித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின்
துணை வேந்தரை மேற்கோள்காட்டியே இச் செய்திகள் வெளிவந்துள்ளன.
முஸ்லிம் மாணவிகள் சிலர் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ளும் நிகாப் அணிந்துகொள்ள அனுமதி கோரியுள்ளனர்.
இதனையடுத்து விடயம் தொடர்பில் பல்கலைகழக நிருவாகத்துடன் கலந்துரையாடிய குறித்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
.