வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தனது மனைவியை வேறொரு நபருடன் தகாத நடத்தையில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் தமயந்த விஜேஸ்ரீ தெரிவித்தார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கணவனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வவுனியாவில் இருந்து வந்து தங்கியிருந்த யுவதி ஒருவர் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதன் அடிப்படையில் கணவர் தன்னையும் தகாத செயலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக குறித்த பெண்தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட கணவரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது சந்தேகநபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்