Sunday, December 8, 2013

சிங்கள அரச ஊழியர்கள் தமிழ் மொழியைக் கற்பதை அரசு வலியுறுத்தக்கூடாது எனும் பொதுபலசேனாவின் கருத்தை முஸ்லிம் மக்கள் கட்சி

சிங்கள அரச ஊழியர்கள் தமிழ் மொழியைக் கற்பதை அரசு வலியுறுத்தக்கூடாது எனும் பொதுபலசேனாவின் கருத்தை முஸ்லிம் மக்கள் கட்சி பெரிதும் வரவேற்பதாக அதன் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

ஊண்மையில் சிங்கள் மக்கள் தமிழ் மொழியை கற்கவேண்டும் என வலியுறுத்துவது மனிதாபிமான செயலாக தெரியவில்லை. காரணம் அவர்களில் பலர் வாழுகின்ற சூழல் தமிழ் மொழி புழக்கம் இல்லாததால் அவர்களுக்கு அம்மொழியை கற்பதில் பாரிய கஷ்ட்டம் இருப்பதை காண்கின்றோம்.

அத்துடன் தமிழ் மொழியை சிங்களவர்கள் கற்கத் தொடங்கினால் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் தெரிந்த சிங்களவர்களை அரசாங்கம் நியமிக்க முயற்சி செய்யும். இதன் காரணமாக தமிழ் பேசும் மக்கள் அரச கருமங்களில் இணைய முடியாத நிலை ஏற்படும். இதனால் சிங்கள மக்கள் அரச அதிபர்களாக பிரதேச செயலாளர்களாக நியமிக்கப் படும்போது அதனை தமிழ் பேசம் மக்கள் எதிர்த்தால் அந்த சிங்களவாதிகளுக்கும் தமிழ் தெரிந்த தமிழ் பேசுவோரே என அரசாங்கம் நியாயம் பேசும்.

இன்றய நிலையில் பல பொலிஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த பொலிஸார் தேவை என்பதற்காக தமிழ், முஸ்லிம், பொலிஸார் அதிகமாக நியமிக்கப் படுவதை காண்கின்றோம். சிங்களவர்கள் தமிழ் படித்தால் இந்த இடங்களையும் அவர்களைக் கொண்டே நிரப்ப அரசு முயற்சி எடுக்கும்.

அதேபோல் முஸ்லிம் மக்களுக்கான பல தொழில் வாய்ப்புக்கள் என்பன அவர்கள் மும்மொழியும் தெரிந்தவர்கள் என்பதை மேலதிக அவர்களுக்குத் தகுதியாக காணப்படுவதால் அதிகம் தொழில் வாய்ப்பக்கள் பெறக்கூடியதாக உள்ளது. ஆனால் சிங்களவர்கள் தமிழ் கற்றால் முஸ்லிம்களின் தொழில் வாய்ப்புக்களில் பாதிப்பு ஏற்படும்.

அகவே சிங்கள மக்களை சிங்கம் மட்டும் தெரிந்தவர்களாகவே இருக்க விடுவதுதான் அவர்களை இந்த நாட்டுக்குள்ளேயே குறிப்பிட்ட வரையறைக்குள் வாழ்வதற்கு வழிவிட முடியும். இதைத்தான் பொதுபல சேனாவும் விரும்புகின்றது. அந்த வகையில் சிங்கள் மக்கள் குறிப்பாக அரச ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும்.

இதனை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் வலியுறுத்த வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அதேபோல் தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கும் சிங்கம் விருப்ப மொழியாகவே இருக்க வேண்டுமே தவிர கட்டாய மொழியாக இருக்கக் கூடாது. என்பதனையும் முஸ்லிம் மக்கள் கட்சி வலியுறுத்துகின்றது. என்று அவர் மேலும் தெரிவித்தார். (MN)
Disqus Comments