Saturday, March 29, 2014

ஜப்பானில் ''செல்போன்களை இரவு 9 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைத்து விட வேண்டும்''

ஜப்பானில் செல்போனில் கேம் விளையாடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் படிப்பில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை என்று பெற்றோர் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானின் எய்சி பிராந்தியம் கரியா நகரில் உள்ள தொடக்க பள்ளி ஒன்று  மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், பள்ளியில் படிக்கும் 13 ஆயிரம் மாணவர்களும் செல்போன்களை இரவு 9 மணிக்கு தங்கள் பெற்றோரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வர் புஷிடோஷி ஒகாஷி கூறுகையில், Ôசெல்போன்களை மாலையிலேயே பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும்படி பெற்றோர் பலர் எங்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். பள்ளியில் உத்தரவு போட்டிருக்கிறார்கள் என்ற பயத்தில் மாணவர்களும் செல்போனில் கேம் விளையாடுவதை குறைத்து கொள்வார்கள். எனினும், இந்த உத்தரவை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதில்லை. மாணவர்களின் பெற்றோரே முடிவு எடுத்து கொள்ளலாம்Õ என்றார். 

Disqus Comments