Wednesday, March 26, 2014

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவு:

மேல் மற்றும் தென் மாகாண சபைத்தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின் போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இரு மாகாணகளிலும் இதுவரையிலும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் 1008 இடம்பெற்றுள்ளதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளன என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) தெரிவித்துள்ளது.
Disqus Comments