நேற்று வெளியாகியுள்ள 2013 க.பொ.த சா/த பரீட்சை முடிவுகளின்படி 9444 மாணவர்கள் 9
பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன
தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 66.67% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பரீட்சை முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (04) கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இம்முறை பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாவர்களின் எண்ணிக்கை 5737 என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
2016ம் ஆண்டில் 75% சித்தியை எதிர்பார்க்க முடியும் என அவர் கூறினார்.
2013 பரீட்சை முடிவுகளின்படி விஞ்ஞான பாடத்தில் 67.53% மாணவர்களும் கணித பாடத்தில் 57.22% மாணவர்களும் ஆங்கில பாடத்தில் 47.68% மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.