புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலையில் அதிபர் சுமணசிறி அமரசிங்க இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்
கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட அவர் மீது பெற்றோர் ஊற்றி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த அதிபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (03) இரவு 10 மணியளவில் புத்தளம் - அநுராதபுரம் வீதியின் 5ம் கட்டை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிபர் வைத்தியசாலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தன்னை வேனில் வந்த நால்வர் கடத்தியதாகவும் வேனில் வந்த ஒருவர் தனது முச்சக்கரவண்டியை செலுத்தி வர மற்றையவர்கள் வேனுக்குள் வைத்து தன்னை தாக்கியதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
200 மீற்றர் தூரம் சென்றதும் தன்னை வேனில் இருந்து இறக்கி பெற்றோல் ஊற்றி எரிக்க முயற்சித்த போது தான் தப்பியோடியதாக அவர் கூறியுள்ளார்.
வேனில் இருந்தவர்கள் தன்னை இறக்கிவிட்ட இடத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றதாகவும் 1 மணியளவில் வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.
பாடசாலை இரும்புகளை விற்ற குற்றச்சாட்டில் குறித்த அதிபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது