Thursday, May 29, 2014

களனி விபத்தில் ஸ்ரீ ஜயவா்தனபுர பல்கலைக்கழக மாணவி பலி

நீர்கொழும்பு- கண்டி வீதியை இணைக்கும் அதிவேகநெடுஞ்சாலையின் நுழைவு வீதியில் வனவாசல மேம்பாலத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்விப்பயிலும் பேராதனையைச்சேர்ந்த ஸ்ரீணி ராஜபக்ஷ (வயது 24) என்ற மாணவி பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் நான்குபேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வத்தளை பகுதியிலிருந்து கண்டி பக்கமாக பயணித்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை உடைத்துகொண்டு வீதியின் மற்றைய பக்கத்திற்கு சென்று பாலத்துடன் மோதியதினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments