Thursday, May 29, 2014

காணிப் பிரச்சினையினால் தம்பியின் மூக்கை கடித்து துண்டாக்கிய பாசக்கார அண்ணன்

காணித் தகராறு காரணமாக தம்பியின் மூக்கை அண்ணன் கடித்து துண்டாடிய சம்பவமொன்று குருநாகல், மொரகொல்லாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு துண்டாடப்பப்பட்ட மூக்கை மீண்டும் பொருத்துவதற்கான சத்திரசிகிச்சையொன்று குருணாநகல் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரித்தனர்.

இந்த சம்பவத்தின் போது, அண்ணனின் கையை தம்பி கடித்து காயப்படுத்தியுள்ளார் என்றும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
Disqus Comments