Thursday, May 29, 2014

கொழும்பில் விபசார விடுதி சுற்றி வளைப்பு: 7 பெண்கள் கைது

மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்று பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதுடன் 7 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.
 
மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வந்தருக்கு சொந்தமான கட்டிடமொன்றிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
 
 குறித்த விடுதி சுற்றி வளைப்பின் போது இரத்மலானை, லுணுகல, வவுனியா தெஹிவளை, படால்கும்பு மற்றும் மாத்தளை பகுதிகளைச் சேர்ந்த தமிழ் சிங்களப் பெண்களை கைது செய்ததாகவும்  இவர்களில் ஒருவர் 17 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைது செய்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Disqus Comments