Friday, May 30, 2014

சவுதி அரேபியாவில் சிலிண்டர் வெடித்ததில் இலங்கை முஸ்லிம் பணிப்பெண் மரணம்


வீட்டு வேலைக்காக சவூதிஅரேபியா சென்ற இலங்கை பெண்ணொருவர் சமையல் வாயு சிலிண்டர் வெடித்ததில், கிங் வைத்தியசாலையில் கோமாவில் இருந்த பின்னர் புதன்கிழமை (28) உயிரிழந்துள்ளதாக அரேபிய நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாத்திமா சப்பாயா (வயது 38) என்பவரே சம்பவத்தின் போது உயிரிழந்தவராவார். இச்சம்பவமானது மே 15ஆம் திகதி இடம்பெற்றதுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த பெண் வீட்டில் தனிமையான இருக்கும் போது சமையல் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அவதானிக்காமல் வீட்டிலுள்ள மின்குமில்களை ஒளிரவைக்கும் போதே சமையல் வாயு வெடித்துள்ளது.

கொழும்பிலிருந்து 50கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை வசிப்பிடமாக கொண்ட குறித்த பெண் விவாகரத்தான நிலையில் தனது இரண்டு மகன்மார்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 15 மாத காலமாக சவூதிஅரேபியாவில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார். சிலிண்டர் வெடித்ததில் அவருடைய உடலில் பல இடங்களில் தீக்காயங்கள ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய பூதவுடலை நல்லடக்கம் செய்வது தொடர்பாக அரேபியாவுக்கான இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்வதாகவும், அவருடைய சம்பளத்தை வேலை செய்த இடத்திலிருந்து பெற்றுக்கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Disqus Comments