Friday, May 30, 2014

இனி இலங்கை பெண் பொலிஸாருக்கு நீட்காட்சட்டை, குட்டைப் பாவாடை நீக்கம்.

பொலிஸ் சேவையில் ஈடபட்டுள்ள பெண்களுக்கென மற்றுமொரு சீருடையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. 


தற்போதுள்ள சீருடைக்கு மேலதிகமாகவே இந்த புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 


பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. 


இந்த புதிய சீருடையும் காக்கி நிறத்திலேயே நிர்மாணிக்கப்படவுள்ளது. பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பெண் பொலிஸ் சிப்பாய்களுக்கு முழுக் காற்சட்டையும் சேர்ட்டும் வழங்கப்படவுள்ளன. 


அத்துடன், பெண் பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பெண் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு முழுக் காற்சட்டை, சேர்ட் மற்றும் பூட்ஸ் கோட்டும் வழங்கப்படவுள்ளது. 


இலங்கை பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெண்கள் இதுவரை காலமும் காக்கி நிறத்திலான குட்டைப் பாவாடையும் சேர்ட்டுமே சீருடையாக அணிந்து வருகின்றனர். 


அலுவலக வேலைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கருத்திற் கொண்டே அவர்களுக்காக இந்த புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. 


இதேவேளை, பொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ள கர்ப்பிணிகளுக்கென்றும் புதிய ஆடையொன்றை அறிமுகப்படுத்த பாதுகாப்பு செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது. 
Disqus Comments