இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எ திர்கட்சியின் முன்னாள் தலைவியாக இருந்த போது வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இவர் 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடாளுமன்றத்துக்கு குழு ஒன்றுடன் வருகை தந்திருந்தார்.
அந்நேரத்தில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களையும் உள்நாட்டு தலைவர்களையும் சந்தித்தார்.
அதே போன்று மலையத்தில் வாழும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய நிதிதிட்டம் ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார்.
