.jpg)
கடும் மழைக்காரணமாக முறிந்து விழுந்த மரத்தை பார்வையிடுவதற்காக சென்ற சிறுவனொருவன் மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் எஹலியகொடவில் செவ்வாயக்கிழமை (3) காலை இடம்பெற்றதாக எஹலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
எஹலியொட, யாயா வீதியில் வசித்து வந்த மிதுன் குமார என்ற 16 வயது சிறுவனே பரிதாகரமாக உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் தற்போது எஹலியகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.