அவுஸ்திரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று மெல்பேர்ன் ஜிலோங் என்னும் இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி தீக்குளித்த 29 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
குறித்த இளைஞர் சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த 2013 ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவருடைய உடலில் 90 வீதம் தீக்காயம் ஏற்பட்டதாலேயே மரணம் சம்பவித்தாக மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
