ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு இலங்கை நேரப்படி 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிக்கும் கிங்ஸ்11 பஞ்சாப் அணிக்கும் இடையில் இந்த இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் முதலாவது தெரிவுப்போட்டியில் விளையாடி இருந்தன. அந்தப் போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. இரணடாவது தெரிவுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறுகின்றது.
முதல் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 14 போட்டிகளில் விளையாடி, 11 வெற்றிகளுடன் 22 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது. கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 14 போட்டிகளில் விளையடி, 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றது.
இந்தப் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் முதற் தடவையாக சம்பியன் ஆகும். கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி வெற்றி பெற்றால் இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)