மியன்மாரில் இயங்கும் பிரபல சஞ்சிகையொன்றின் ஊடகவியலாளர்கள் ஐவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
மியன்மாரில் ஆயுத தொழிற்சாலையொன்று இயங்குவதாக குறித்த சஞ்சிகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து
அரசாங்கத்தின் இரகசியங்களை பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில்
ஊடகவியலாளர்கள் நால்வருக்கும் பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளருக்கும்
சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவர்கள் தெரிவித்தவாறு ஆயதக்கிடங்கு ஒன்று நாட்டில் இயங்கவில்லை என அரசாங்கம் வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,
