ஊவா மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
மாகாண சபையைக் கலைப்பதற்கான கடிதத்தை ஊவா மாகாண ஆளுநர் நந்த மெதிவ்வுக்கு அனுப்பிவைத்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஆளுநரினால்
அந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதியினால்
அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சசீந்திர ராஜபக்ஸ மேலும்
கூறியுள்ளார்.
