அமெரிக்காவில் 11 மாதக்குழந்தையை கொன்றுவிட்டு, அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டு லைக்தேடிய கொடூர தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் குயின்ஸ் என்ற பகுதியில் வசிக்கும் நிகோலி நிக்கி கெல்லி (வயது 23) என்ற பெண்ணுக்கு ஜியாம் பெலிக்ஸ் என்ற 11 ஆண் குழந்தையொன்று உள்ளது. கணவரை விட்டு பிரிந்து தனியாக வசிக்கும் இவர், கடந்த ஞாயிறன்று குழந்தை ஜியாம் பெலிக்ஸின் முகத்தில் போர்வையினால் போர்த்தி மூச்சு திணறவைத்து கொலை செய்துள்ளார். பின்னர் அரைமணி நேரம் வெளியே சென்று வந்த அந்த பெண்,இறந்த மகனின் உடலை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் ஆர்.ஐ.பி ( R.I.P) என்று பெயரிட்டு அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “எனது ஆண்குழந்தையை இழந்துவிட்டேன். அவனை மறுபடியும் என்னுடைய வாழ்க்கைக்கு அழைத்துவர நான் விரும்புகின்றேன். அவன் இறந்து விட்டான் என்பதை அறிகையில் மிக வேதனையாக உள்ளது. ஒரு தாய் என்ற வகையில் நான் அவனை பாதுகாக்க நினைத்தேன். அவனது ஆன்மா என்னையே சுற்றி வரும் என்பதை அறிவேன்” என தெரிவித்துள்ளார்.
கெலியிடம் இருந்து பிரிந்து வாழும் அவரது கணவரே தனது மகன் இறந்து இருப்பதை கண்டு பொலிஸாருக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளார்.
