2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் சிகரெட் பெட்டிகளில் 60 வீதம் படங்களுடன் கூடிய  எச்சரிக்கை அறிவித்தல்கள் காணப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில்  நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை கவனத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் மொஹான் பீரிஸ்,ரோஹினி மாரசிங்க, சிசிர டீ சில்வா ஆப்ரூ உள்ளிட்ட நீதிபதிகள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,சிகரட் விநியோகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை  உரிமை மனு உயர் நீதிமன்றத்தினால் இன்று கவனத்திற்கொள்ளப்பட்டது.
அத்துடன் எச்சரிக்கை படங்களற்ற  சிகரட்பெட்டிகளை 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்குள் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு மனுதாரர்கள் இணங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை தள்ளுப்படி செய்யப்பட்டுள்ளது.
படங்களுடன் கூடிய எச்சரிக்கை சிகரெட் பெட்டிகளில் 60 வீதத்திற்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
