காஸா மீது நான்காவது நாளாக இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், 100 பேர் உயிரிழந்துள்ளனர். நான்காவது நாளில் மட்டும் 10 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை முதல் இஸ்ரேல்-காஸா மோதல் நடைபெற்று வருகிறது. இதில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் இயக்கத்தினர்களுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, ஹமாஸ் இயக்கத்தினர் லெபனான் நாட்டிலிருந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
லெபனான் அரசு செய்தி நிறுவனம் இது தொடர்பாகக் தெரிவிக்கையில் ‘இரண்டு ரொக்கெட்டுகள் லெபனான் எல்லையிலிருந்து ஏவப்பட்டுள்ளது. இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை” எனத் தெரிவித்துள்ளது. இந்த ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள பெற்ரோல் கிடங்கு வெடித்துச் சிதறியுள்ளது.
இதேவேளை, கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் விமானப்படை நடத்தி வரும் தாக்குதலில் 100 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
