சோமாலிய தலைநகர் மொகாடிஷுவிலுள்ள பாராளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் சனிக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்படி, தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதலானது அந்நாட்டு பாராளுமன்றத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற காவலர்கள்காரைச்செலுத்தி வந்த தற்கொலைக்குண்டுதாரி மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதையடுத்தேஅவர்குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
இந்தத் தாக்குதலை தாமே நடாத்தியதாக அல்-ஷபாப் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்.
2011 ஆம் ஆண்டில் தலைநகர் மொகாடிஷுவின் கட்டுப்பாட்டை இழந்த அல்- ஷபாப் போராளிக் குழு பல குண்டுத் தாக்குதல்களை அங்கு நடத்தி வருகிறது.
அல்-கொய்தாவுடன் தொடர்பைக் கொண்டுள்ள இந்தக் குழு, இஸ்லாமிய புனித ரமழான் மாத காலத்தில் மேலும் தாக்குதல்களை நடத்தப்போவதாக சூளுரைத்துள்ளது.கடந்த வார ஆரம்பத்தில் முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான அஹ்மெட் மொஹமட் ஹாயத் மொகாடிஷு நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்தத் தாக்குதலுக்கு அல் - ஷபாப் போராளிக்குழு உரிமை கோரியிருந்தது. அந்த ப்போராளி குழு சோமாலியாவில் இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்க போராடி வருகிறது.