இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்திலுள்ள போராளிகளுக்குமிடையே உடனடி யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது
மேற்படி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிகெய்ரோ சென்றுள்ள நிலையிலேயே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காஸா பிராந்தியத்திலான தாக்குதல் நடவடிக்கையை இரு வாரங்களுக்கு முன் இஸ்ரேல் ஆரம்பித்ததிலிருந்து 500க்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் பலர் பொது மக்களாவர்.
அதேசமயம் இஸ்ரேலிய தரப்பில் 18படை வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி மோதல்களில் அதிகளவானோர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். அன்றைய தினம் 13 இஸ்ரேலிய படை வீரர்களும் 100 க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.