Wednesday, July 23, 2014

அசிரி என்ற பெயாில் இறக்குமதி செய்யப்பட்ட 5.6மில்லியன் பெறுமதியான மஞ்சள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிப்பு

இந்தியாவிலிருந்து அரிசியென வெளிப்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட  இரண்டு கொள்கலன்களில் இருந்த 27,000 கிலோ மஞ்சளை சுங்க வருவாய் செயலணிக்குழுவினர்   கண்டுபிடித்துள்ளனர்.  வரியில்  5.6 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக  சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒறுகொடவத்தை களஞ்சியசாலையில், கடந்த 14ஆம் திகதி தூத்துக்குடியிலிருந்து வந்த  இரண்டு கொள்கலன்களை  சுங்க வருவாய் செயலணிக்குழுவினர் சோதனையிட்டனர்.

இந்த நிலையில், கொள்கலனில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பொருள் 37,000 கிலோகிராம் அரிசி வெளிப்படுத்திய இறக்குமதியாளர், 187,500 ரூபாவை மாத்திரம் வரியாக செலுத்தியுள்ளார்.

இந்தச் சோதனையின்போது அவற்றில் 10,000 கிலோ அரிசியும் 27,000 கிலோ மஞ்சளும் இருந்தமை தெரியவந்துள்ளது. இதனால் உண்டான வரி ஏய்ப்பு  5.6 மில்லியன் ரூபாய் எனவும் இறக்குமதியான பொருட்களில் மொத்தப் பெறுமதி 10.5 மில்லியன் ரூபாய் ஆகும். 
Disqus Comments