Wednesday, July 23, 2014

மதுரங்குளி - தொடுவாவில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; விசாரணைகள் ஆரம்பம்

புத்தளம் மதுரங்குளி முக்குத்தொடுவாய் பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
முக்குத்தொடுவாய் பகுதியில் நெருங்கிய உறவினர் ஒருவரால் சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, இறக்குவானையில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று பெல்மதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துஷ்பிரயோக சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
Disqus Comments