தேசிய மட்டத்தில் நடைபெறும் பரீட்சைகளுக்கு 5 நாட்களுக்கு முன் தொடக்கம்
பரீட்சை முடிவடையும் வரை பரீட்சாத்திகளுக்கு தனியார் வகுப்புக்களை
நடத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அக்காலப்பகுதியில் குறித்த பரீட்சை தொடர்பான கருத்தரங்குகளை நடத்துதல், செயற்றிட்டங்களை மேற்கொள்ளுதல், கலந்துரையாடல்களை நடத்துதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பரீட்சைகள் தொடர்பில் வெளியிடப்படும் முன்மாதிரி வினாத்தாள்களையும் பரீட்சை காலத்தில் பகிர்த்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
பரீட்சை வினாத்தாளில் இடம்பெறும் வினாக்களை பெற்றுத் தரப்படும் என்றோ, பரீட்சை வினாத்தாள்கள் பெற்றுத் தரப்படும் என்றோ பதாதைகள் வெளியிடல், கையேடுகளை வெளியிடல் மற்றும் அவற்றை வைத்திருத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இம்முறை இடம்பெறும் கல்விப் பொதுதரா தர உயர் தரப் பரீட்சை தொடர்பிலான தனியார் வகுப்புக்களை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல் என்பன எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளது.
இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பிலான மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் பரீட்சை இடம்பெறும் தினம் வரை தடை செய்யப்பட்டுள்ளன.