ஊவா மாகாணச் சபை தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க விரும்புகிறவர்கள்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என
தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் நடவடிக்கை கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகியது.
எதிர்வரும் ஆறாம் திகதிக்குள் திணைக்களத் தலைவரினூடாக மாவட்ட தெரிவு
அத்தாட்சி அதிகாரிக்கு அல்லது தேர்தல் செயலகத்திற்கு கிடைக்கும் வகையில்
அனுப்புதல் வேண்டும்.
ஊவா மாகாணச்சபை தேர்தலுக்கு வாக்களிக்க 942,730 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் 609,966 பதுளை மாவட்டத்தையும் 332,764 மொனராகல மாவட்டத்தையும்
பிரதிநிதித்துவப்படுத்தி தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.