Tuesday, July 22, 2014

மலேசியன் விமானம் MH17: கருப்பு பெட்டிகளை கையளித்தனர் கிளர்ச்சிப் படையினர்

கிழக்கு உக்ரைன், க்ரபோவ் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டதாகக்கருதப்படும் மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தின் கருப்பு பெட்டிகளை மலேசிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வரசாங்கத்திடம் கையளித்துள்ளனர் கிழக்கு உக்ரேனில் குறித்த பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கிளர்ச்சிப் படையினர்.

விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து சிதறுண்ட 282 பேரின் உடல்களும் ரயில் மூலமாக அப்பிரதேசத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்ற அதேவேளை சம்பவத்திற்கு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப்படையினரே காரணம் என மேற்குலகமும் உக்ரேனிய அரசே காரணம் என கிளர்ச்சிப்படையினரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விமானத்தில் பயணம் செய்த விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 298 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments