ஜாதிக பல சேனாவின் தலைவரும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வட்டரக்க விஜயத்த தேரருக்கான விளக்கமறியலை எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது.
பொய்யான முறைப்பாட்டைச் செய்து பொலிஸாரை அலைக்கழித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வட்டரக்க தேரர், இன்று மீண்டும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான், அவரது விளக்கமறியலை நீடித்தார்.
அத்துடன், அன்றைய தினத்தில், அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறும் நீதவான் குறிப்பிட்டார்.