புதுடெல்லி: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்தியாவின் டெல்லிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.
ஐ.நா.
வெளியிட்ட பட்டியலில், ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளது.
அங்கு மக்கள் தொகை 38 மில்லியனாக இருக்கும் என்றும், இந்த ஜனத்தொகை குறைய
வாய்ப்பு உள்ளதாகவும், 2030ல் 37 மில்லியனாக குறையும் என்றும் அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் டெல்லியில் தற்போது 25
மில்லியனாக இருக்கும் மக்கள் தொகை, 2030ல் 36 மில்லியனாக அதிகரிக்க
வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 2050ல் இந்தியாவின் மக்கள் தொகை
சீனாவை முந்தும் என்றும் அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை
அடிப்படையில் ஷாங்காய் (23 மில்லியன்) 3-வது இடத்திலும், மெக்சிகோ சிட்டி
4-வது இடத்திலும், மும்பை 5-வது இடத்திலும், சாவ் பாவ்லோ 6-வது இடத்திலும்
உள்ளது. இந்த நகரங்களில் சுமார் 21 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் தொடர்பாக இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்டியலை ஐ.நா நேற்று வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
