Saturday, July 12, 2014

பௌத்­தர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்தி­ரித்து ஹக்கீம் தலை­மையில் முஸ்லிம்கள் பிர­சாரம்:ஹெல உறு­மய

மத நல்­லி­ணக்கம் என்ற பெயரில் பௌத்­தர்­களின் குரலை நசுக்காது சர்­வ­தேச ரீதியில் அமைச்சர் ஹக்கீம் தலை­மையில் முஸ்லிம் தலை­வர்கள் பௌத்­தர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்திரிக்கும் பிர­சா­ரத்தை தடுத்து உண்­மையை உல­கிற்கு தெளி­வு­ப­டுத்த அர­சாங்கம் முன்­வர வேண்­டு­மென வலி­யு­றுத்தும் அரசின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய தர்கா நகரில் பௌத்த குரு­வா­னவர் தாக்­கப்­பட்ட செய்­தியை இருட்­ட­டிப்பு செய்­ததன் பின்­னணி என்ன? என்றும் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.
 
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;
 
அளுத்­கம பேரு­வ­ளையில் ஏற்­பட்ட துர்ப்­பாக்­கிய சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து பௌத்த மக்­க­ளுக்கும் பௌத்த குரு­மார்­க­ளுக்கும் மற்றும் பௌத்த அமைப்­பு­க­ளுக்கும் எதி­ராக பிர­சாரம் உலகம் பூராவும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.
 
இச்­சம்­ப­வத்தின் உண்மை நிலை முற்­றாக இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்டு பௌத்­தர்கள் உலகம் பூரா­கவும் அவ­மா­னப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள். இதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்­கு­வ­தோடு வேறு சில முஸ்லிம் தலை­வர்­களும் துணை போகின்­றார்கள். இலங்­கையில் பௌத்த பயங்­க­ர­வாதம் அடிப்­ப­டை­வாதம் தலை விரித்­தா­டு­வ­தாக சர்­வ­தேச ஊட­கங்­க­ளுக்கு பேட்­டி­களை இவர்கள் வழங்­கு­கின்­றனர்.
 
அத்­தோடு இப்­பி­ரச்­சினை தொடர்­பாக நீதியும் சட்­டமும் நியா­ய­மாக அமுலில் இல்லை. பொசான் போயா தினத்­தன்று தர்கா நகரில் முஸ்லிம் இளை­ஞர்கள் மூவர் பௌத்த குரு மீது தாக்­கு­தலை நடத்­தினர். இது எவ்­வ­ளவு பாரிய கவ­லைக்­கு­ரிய விடயம். ஆனால் இது தொடர்­பாக உங்­க­ளது ஆட்­சி­ய­தி­கா­ரத்தின் கீழுள்ள ஊட­கத்­துறை நடந்­து­கொண்ட விதம் கவ­லை­ய­ளிக்­கின்­றது.
 
தேசிய ரீதியில் மட்­டு­மல்­லாது சர்­வ­தேச ரீதி­யிலும் இச்­சம்­பவம் தொடர்பில் பௌத்­தர்கள் மீது மட்­டுமே குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன. திட்­ட­மிட்டு எம்மை குற்­ற­வா­ளி­க­ளாக்­கி­யுள்­ளனர்.
 
ஆனால், பிக்கு மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது தொடர்பில் எந்­த­வொரு முஸ்லிம் தலை­வரோ மதத்­த­லை­வரோ மன்­னிப்பு கேட்­க­வில்லை.
 
பௌத்­தர்­களின் கூட்­டங்­க­ளுக்கு புல­னாய்வு பிரி­வினர் வந்து செய்தி சேக­ரிக்­கின்­றனர். குருமார் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றனர். ஆனால் தர்கா நகரில் அன்­றைய தினம் 3,000 மேலான முஸ்­லிம்கள் எவ்­வாறு பள்­ளி­வா­சலில் கூடி­னார்கள்? அவர்­க­ளது கைக­ளுக்கு பொல்­லுகள் வாள்கள் பெற்­றோல்கள் குண்­டுகள் ஆயு­தங்கள் எப்­படி வந்­தது என்­பது தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வில்லை.
 
குரு முஸ்­லிம்­களால் தாக்­கப்­பட்­டதை இருட்­ட­டிப்பு செய்து அர­சுக்கும் பௌத்­தர்­க­ளுக்கும் எதி­ராக ஹக்கீம் தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் பிர­சாரம் தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டதா?தலாய்­லா­மாவும் முஸ்­லிம்­க­ளுக்கு சார்­பா­கவும் பௌத்­தர்­க­ளுக்கு எதி­ரா­கவும் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ராஜதந்திர ரீதியில் பௌத்தர்களுக்கு எதிரான அபகீர்த்தியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா?உங்கள் தலைமையின் கீழ் உலகம் முழுவதும் இலங்கையின் பௌத்தர்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர்.எனவே, இதனை தடுக்க ராஜதந்திர மற்றும் தூதரக மட்டத்தில் அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Disqus Comments