Saturday, July 12, 2014

இஸ்ரேல் காஸா யுத்த நிறுத்தம் தொடர்பில் இடைத்தரகராக செயற்பட அமெரிக்கா தயார்

இஸ்­ரே­லுக்கும் பலஸ்­தீன காஸா பிராந்­தி­யத்­தி­லுள்ள போரா­ளி­க­ளுக்­கு­மி­டை­யி­லான யுத்த நிறுத்தம் ஒன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு அமெ­ரிக்கா தயார் நிலையில் உள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்­துள்ளார்.
 
இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்­டான்­யா­ஹு­வு­ட­னான தொலை­பேசி உரை­யா­டலின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்துள்­ளார்.
 
காஸா தொடர்­பான இஸ்­ரேலின் செயற்­பாடு முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ள­தாக நெட்­டான்­யாஹு ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார்.பலஸ்­தீன காஸா பிராந்­தி­யத்தில் இஸ்ரேல் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வான் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­த­தி­லி­ருந்து இது­வரை 90 க்கும் மேற்­பட்ட காஸா பிர­தே­ச­வா­சிகள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பலஸ்­தீன அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
 
அத்­துடன் இஸ்­ரேலின் இந்த வான் ­தாக்­கு­தல்­களில் 600 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக பலஸ்­தீன சுகா­தார அமைச்சு கூறு­கி­றது.
 
காஸா பிராந்­தி­யத்­தி­லுள்ள 100 க்கும் மேற்­பட்ட இலக்­குகள் மீது வியா­ழக்­கி­ழமை ­தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தா­கவும் பலஸ்­தீன போரா­ளிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து- ஏவு­க­ணைத் ­தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் இஸ்ரேல் தெரி­விக்­கி­றது.
 
எனினும் இஸ்ரேல் தரப்பில் எவரும் உயி­ரி­ழந்­த­தாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.அதே­ச­மயம் தென் லெப­னா­னி­லி­ருந்து குறைந்­தது ஒரு ஏவு­கணை வட இஸ்­ரே­லுக்குள் வெள்­ளிக்­கி­ழமை ஏவப்­பட்­டுள்­ளது. இந்­தத்­ தாக்­கு­த­லிலும் எவரும் உயி­ரி­ழந்­த­தாக அறிக்­கை­யி­டப்­ப­ட­வில்லை.
 
இஸ்­ரேலின் மெதுலா மற்றும் கிர்யத் ஷமோனா நகர்­க­ளுக்­கி­டையில் கபர்­வுவல் நக­ருக்கு அண்­மை­யி­லுள்ள திறந்த வெளியில் அந்த ஏவு­க­ணைகள் விழுந்து வெடித்­துள்­ளன.
காஸா­வி­லுள்ள ஹமாஸ் போரா­ளி­களின் தொடர் ஏவு­கணைத் தாக்­கு­தல்­க­ளுக்கு பதி­லடி கொடுக்கும் முக­மா­கவே இஸ்ரேல் வான் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தது.
 
பலஸ்­தீ­னர்­களால் கடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் 3 இஸ்­ரே­லிய இளை­ஞர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டமை, அதற்கு சில நாட்கள் கழித்து பலஸ்­தீன இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்­டமை ஆகிய சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்­தீன பிராந்­தி­யத்தில் கடும் பதற்ற நிலை நில­வு­கி­றது.
 
இந்­நி­லையில் இஸ்­ரே­லிய பிரத­ம­ருடன் தொலைபேசியில் உரை­யா­டிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, இஸ்ரேல் காஸா பிராந்­திய மோதல் மேலும் தீவி­ர­ம­டையும் அபா­ய­முள்­ளமை குறித்து கவலை தெரி­வித்­துள்­ள­துடன் பொது­மக்­களின் உயிரைப் பாது­காத்து அமை­தியை மீள நிலை நிறுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்­தையும் சக­ல தரப்­பி­னரும் மேற்­கொள்ள வேண்­டிய தேவை­யுள்­ள­தாக வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
 
அதே­ச­மயம் பிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்­கொயிஸ் ஹொலண்டே மற்றும் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் ஆகி­யோரும் இஸ்ரேலிய காஸா பிராந்தியத்தில் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரியுள்ளனர்.
 
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இஸ் ரேலிய மற்றும் பலஸ்தீன போராளிகள் கட்டுப்பாட்டை பேண வேண்டும் எனவும் பிறிதொரு முழுமையான போருக்கு முயற்சிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
 
Disqus Comments